சமாதானத்திற்கான பயணம் யாழில் முடிவுற்றது! - Yarl Thinakkural

சமாதானத்திற்கான பயணம் யாழில் முடிவுற்றது!


சமூகங்களுக்கிடையே நல்லுறவும், சமாதானமுமு் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கோரியும் ஆரம்பிக்கப்பட்ட மூன்று சில்லு சைக்கில் பயணம் இன்று யாழ்ப்பாணத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 

மாற்றுத்திளனாளியான மக்கீன் முகமட் அலி என்பவர் கடந்த முதலாம் திகதி இந்தப் பயணத்தை யாழில் ஆரம்பித்திருந்தார். 

யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் கொழும்பு, காலி, மாத்தறை என 15 நாட்களாக தொடர்ந்த நிலையில் இன்று யாழில் முடித்துக் கொண்டார். 

தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் செல்லும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பயணமானது 1400 கிலோ மீற்றர் தூரம் சென்று வந்த நிலையிலையே இன்று முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் போது தனக்கு ஆதரவை வழங்கிய தமிழ், முஸ்லிம் ,சிங்கள மக்களுக்கும் அத்தோடு ஊடகங்களுக்கும் இதனை ஏற்பாடு செய்த அமைப்பிற்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். மேலும் தனது கோரிக்கைகள் தொடர்பில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திதிப்பதற்காக தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Previous Post Next Post