திருமணத்துக்குப் பின் இணையும் சூர்யா-ஜோதிகா! - Yarl Thinakkural

திருமணத்துக்குப் பின் இணையும் சூர்யா-ஜோதிகா!

காக்க காக்க 2 படத்துக்காக, திருமணத்துக்குப் பின் மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளார் நடிகை ஜோதிகா.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘காக்க காக்க’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன். தமிழில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தற்போதைய டிரெண்டாக உள்ளது.

அந்த வகையில், ‘வேலையில்லா பட்டதாரி 2‘, ‘சாமி ஸ்கொயர்’, ‘சண்டக்கோழி 2’, ‘விஸ்வரூபம் 2’, ‘மாரி 2’, ‘சார்லி சாப்ளின் 2’ என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை. ஆனால், ‘அரண்மனை2’, ‘காஞ்சனா2’ உட்பட ஒரு சில படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா , ஜோதிகா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் இரண்டாவது பாகத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதிலும் சூர்யா , ஜோதிகாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும், ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாகவும், அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Previous Post Next Post