-நாயாறு புத்தசிலை விவகாரம்- பிள்ளையார் மீது பழிபோடும் தொல்பொருள் திணைக்களம்! - Yarl Thinakkural

-நாயாறு புத்தசிலை விவகாரம்- பிள்ளையார் மீது பழிபோடும் தொல்பொருள் திணைக்களம்!

முல்லைத்தீவு நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தடியில் 2000 வருடம் பழமைவாய்நத புத்தவிகாரை ஒன்று இருந்தது. அப்புத்தவிகாரை குருகந்த ராஜமகாவிகாரை என்ற பெயரால் அழைக்கப்பட்டது என்று தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல தெரிவித்தார்.

மேலும் அங்கு பழைமையான கலைப்பொருட்கள் மற்றும் மடாலயன் என்பவை இருந்ததற்கான சான்றுகளும் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை மன்றில் முன்னிலையாகும்படி நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல முன்னிலையாகி, நாயாறில் உள்ள குருகந்த ராஜமகாவிகாரை 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்றும் கூறியுள்ளார்.

புராதன பௌத்த விகாரை இருந்த இடத்தில் இந்து ஆலயத்தை அமைப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post