ஜ.நாவில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை! - Yarl Thinakkural

ஜ.நாவில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை!

ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள இவ்வாண்டுக்கான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தொடர்பில் புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

கனடா, ஜேர்மனி, மெசடோனியா, மொன்டினேக்ரோ மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த பிரேரணையை முன்வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் ஒழுங்கமைப்புக் கூட்டத்தில் அறிக்கை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய பிரத்தானியாவின் பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை விரிவாக்கும் இலக்குடன் இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பிரித்தானியா கேட்டுக் கொண்டுள்ளது.

அதேநேரம் 2015ம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் முழுமையான அமுலாக்கத்துக்கும், பிரித்தானியா சகலத் தரப்புடனும் ஒத்துழைத்துச் செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post