சங்குப்பிட்டியில் விபத்து! -மானிப்பாய் இளைஞர் பலி- - Yarl Thinakkural

சங்குப்பிட்டியில் விபத்து! -மானிப்பாய் இளைஞர் பலி-

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் நடைபெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

பொன்னாலை வீதி மானிப்பாயைச் சேர்ந்த 22வயதான சிவப்பிரகாசம் தனுசன் என்ற இளைஞரே இவ்விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவர். அவருடன் மோட்டார் சைக்கிலில் பயணித்த  மானிப்பாயைச் சேர்ந்த 24வயதான வசந்தகுமார் நிரோசன் என்பவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூநகரி நோக்கி சென்ற இவர்கள் பாலத்திற்கு அருகாமையில் உள்ள வளைவில் திருப்பிய வேளை மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து வீதி ஓரமாகக் காணப்பட்ட மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதாகத் தெரிய வருகிறது.

Previous Post Next Post