புலிகள் இருந்தால் இந் நிலை வருமா? -மாணவனின் குடும்பம் ஆதங்கம் இது-  - Yarl Thinakkural

புலிகள் இருந்தால் இந் நிலை வருமா? -மாணவனின் குடும்பம் ஆதங்கம் இது- 

கிளிநொச்சியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனை தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதால் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மாணவனின் பெற்றோர் தமிழீழ விடுதலை புலிகள் இப்போதும் இருந்திருந்தால் தனது மகனுக்கு இந்த நிலை வந்திருக்காது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த மாணவனை தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இதன் போது "இயக்கம் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலையேற்பட்டிருக்காது" என மாணவனின் குடும்பத்தினர் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
Previous Post Next Post