அரங்கு நிறைந்த மக்கள்! தீபச்செல்வனின் நடுகல் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு!  - Yarl Thinakkural

அரங்கு நிறைந்த மக்கள்! தீபச்செல்வனின் நடுகல் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு! 

தீபச்செல்வனின் நடுகல் நாவல் வெளியீடு கிளிநொச்சி கரைச்சி பிரதேச கேட்போர் கூடத்தில் முன்னாள் மாகாணக் கல்வி அமைச்சர் குருகுலராஜா தலைமையில் நடைபெற்றது. 

முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கலந்து கொண்டார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் எழுத்தாளருமாகிய செல்வமனோகரன் முன்னாள் போராளியும் எழுத்தாளருமாகிய வெற்றிச்செல்வி ஆகியோர் விமர்சன உரையாற்றினர். 

கப்டன் வேலவன், கப்டன் யேசுதன் ஆகியோரின் தாயார் சண்முகராசா சரஸ்வதி முதல் பிரதியை முதன்மை விருந்தினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் இருந்து பெற்றுக்கொண்டார். 

அரங்கம் நிறைந்தவர்களின் மத்தியில் நடுகல் நூல் அறிமுக விழா சிறப்பாக நடந்தேறியது.Previous Post Next Post