இணுவிலில் முதியவர் மீது கத்திக்குத்து! -இருவர் கைது- - Yarl Thinakkural

இணுவிலில் முதியவர் மீது கத்திக்குத்து! -இருவர் கைது-

யாழ்ப்பாணம் இணுவில் கிழக்குப் பகுதியில் முதியவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கண நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று செவ்வாய் கிழமை நண்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தகவல் தெரிவித்தனர். கே.குமாரசாமி (வயது-82) என்ற முதியவரே கத்திக்குத்துக்கு இலக்காகிக் காயமடைந்தார். அவரும் அவரது துணைவியுமே அந்த வீட்டில் வசித்து வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் காயமடைந்த முதியவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அவரது மனைவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொள்ளை முயற்சியில்லை என முதியவரின் மனைவி தெரிவித்துள்ளார். 

விசாரணைகளின் அடிப்படையில் இளைஞர்கள் இருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் முதியவரின் வீட்டில் வேலை செய்பவர்கள். 

அவர்களில் ஒருவரே மதுபோதையில் முதியவரைக் குத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post