யாழ்.பொலிஸார் அசமந்தப் போக்கு! -எதிர்த்து மக்கள் போராட்டம்- - Yarl Thinakkural

யாழ்.பொலிஸார் அசமந்தப் போக்கு! -எதிர்த்து மக்கள் போராட்டம்-

யாழ்.நாவாந்துறையில் 12 வயது சிறுமியை கடத்த முற்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி நாவாந்துறை மக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை நாவாந்துறை சந்தை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

நாவாந்துறை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த நிலையில் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 

மக்களால் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். 
இதனால் ஆத்திரமடைந்த நாவாந்துறை பகுதி மக்களால் தாம் பிடித்துக் கொடுக்கப்பட்ட நபர் எங்கே? எனக்கேட்டும், பொலிஸார் கடத்தல் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் எனக்கேட்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது “எம் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன..?”, “சிறுவர், பெண்கள் துஸ்பிரயோகம் தமிழ் இனத்துக்கு மட்டுமா..?” என்பனபோன்ற கோஷங்களை எழுதி யவாறும், பதாகைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டில் ஈடுபட்டனர்.
Previous Post Next Post