கட்டுநாயக்கவில் பயணிகள் சிரமம்! -விரைவில் தீர்வு அமைச்சர் ரணதுங்க- - Yarl Thinakkural

கட்டுநாயக்கவில் பயணிகள் சிரமம்! -விரைவில் தீர்வு அமைச்சர் ரணதுங்க-

சர்வதேச கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கiயின் போது எற்படும் காலதாமதம் மற்றும் அசோகரியங்களை குறைப்பதற்கான நடவடிக்ககைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட கூட்டத்தில் மேலும் அவர் கருத்து தெரிவிக்ககையில்,
தற்போது எமது சர்வதேச விமானநிலையத்தில் சில குறைபாடுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானதும் முதன்மையானதாகவும் உள்ள பிரச்சினையானது பயணிகளது குடிவரவின் போது ஏற்படும் நெரிசல் மற்றும் காலதாமதமாகும். குறிப்பாக ஒரு சில சந்தர்ப்பங்களில் குடிவரவின் போது ஒரு மணித்தியாலத்தில் இரண்டாயிரம் அல்லது முன்றாயிரம் பயணிகள் விமான நிலையத்தில் தரையிரங்குகின்றனர்.

இதன்போது விமான நிலையத்தில்; நெருக்கடி மற்றும் பயணிகள் பல அசோகரியங்களை எதிர் நோக்கின்றனர். ஆகவே இதனைக் குறைப்பதற்கும் சிறந்த சேவையினை வழங்குவதற்குமான  புதிய தீர்வினை நாம் முன்வைக்கவுள்ளோம். எனினும் இதற்கு நீண்டகால தீர்வொன்று மிகவும் அவசியமாகும் என்றார்.

இக்கூட்டத்தில் விமான நிலைய சேவையை குறுகியகால அடிப்படையிலும் நீண்ட கால அடிப்படையிலும் எவ்வாறு முன்னேற்றுவது என்பது பற்றிய ஆலோசனைகள் மற்றும்  கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இதில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சோடு தொடர்புடைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post