யாழ்.சிறையிலிருந்து 9 கைதிகள் விடுதலை! - Yarl Thinakkural

யாழ்.சிறையிலிருந்து 9 கைதிகள் விடுதலை!

இலன்கையின் சுதந்திர தினமான இன்று யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 9 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. இந்த தினதில் அரச தலைவரின் பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழமையாகும். 

இதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள சிறு குற்றங்கல் புரிந்த 9 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் இன்று 4 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 

ஏனையவர்கள் நாளை செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்படுவார்கள்.

Previous Post Next Post