இந்தியாவுடன் 72மணி நேரத்தில் போர் - Yarl Thinakkural

இந்தியாவுடன் 72மணி நேரத்தில் போர்


அடுத்த 72மணி நேரம் நமக்கு மிக முக்கியமானது, இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அது 2ஆம் உலகப்போரைக் காட்டிலும் மிகப்பெரியதாக இருக்கும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமெட் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அளித்த பேட்டியில், இந்தியாவுடன் ஒருவேளே போர் ஏற்பட்டால், அது 2ஆம் உலகப்போரை காட்டிலும் மோசமானதாக, பெரிதாக அமையும். அந்த போர் மிக பயங்கரமானதாக இருக்கும். அதற்கு பாகிஸ்தான் முழுமையாக தயாராகி இருக்கிறது.  ஆதலால் அடுத்து வரும் 3நாட்கள் மிக முக்கியமானவை. இப்போதுள்ள சூழல் அடுத்து வரும் நாட்களில் போராக மாறலாம், அல்லது அமைதிக்கும் திரும்பலாம் எனத் தெரிவித்தார்.

Previous Post Next Post