ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் இன்று - Yarl Thinakkural

ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் இன்று

மறைந்த ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு அவரது
சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த  ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்படி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகளுக்கு முதல்வர் இனிப்பு வழங்கினார்.
Previous Post Next Post