இலங்கை வர முற்பட்ட 5 பேர் தமிழகத்தில் கைது! - Yarl Thinakkural

இலங்கை வர முற்பட்ட 5 பேர் தமிழகத்தில் கைது!

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு வர முற்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-

இலங்கைக்கு இரகசியமான முறையில் கடல்வழியாக வருவதற்கு குறித்த குடும்பத்தினர் முற்பட்டுள்ளனர். இதன் போது இராமநாதப்புரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 28 முதல் 66 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post