இங்கிலாந்து 448 ஓட்டங்கள் முன்னிலையில்! - Yarl Thinakkural

இங்கிலாந்து 448 ஓட்டங்கள் முன்னிலையில்!

இங்கிலாந்து அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான, 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது.

போட்டியின் நேற்றைய 3 ஆம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது, தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி 4 விக்கட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி 154 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 277 ஓட்டங்களை பெற்றது.

இந்தநிலையில், இங்கிலாந்து அணி 448 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post