போதைப் பொருள் வேட்டை! -42 நாட்களில் 10,368 பேர் கைது- - Yarl Thinakkural

போதைப் பொருள் வேட்டை! -42 நாட்களில் 10,368 பேர் கைது-

போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய 10 ஆயிரத்து 368 பேர் கடந்த 42 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 310 கிலோ கிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவ்வலுவலகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பெப்ரவரி 12 ஆம் திகதி வரை மாத்திரம் ஐய்யாயிரத்து 222 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 224 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாதாள உலக குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் அவ்வலுவலக தகவல்கள் மேலும் குறிப்பிட்டுக்காட்டியுள்ளது.

Previous Post Next Post