பண்டத்தரரிப்பில் 40 இலட்சம் செலவில் அறநெறிப்பாடசாலை! - Yarl Thinakkural

பண்டத்தரரிப்பில் 40 இலட்சம் செலவில் அறநெறிப்பாடசாலை!

வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித்பிரேமதாசவின் எண்ணக்கருவிற்கு அமைய நாடுமுழுவதும் அமுல்படுத்தப்படுகின்ற சிசு தகம் செவன நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ் பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை யாத்திரைதல வளாகத்தில் அறநெறிப்பாடசாலைக்கான அடிக்கல் இன்று ஞாயிற்றுக் கிழமை நாட்டிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்டிடப்பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உதய ஆரியரட்ணா அதன் பணிப்பாளர் அனுருத்த லியனகே கல்விராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சண்டிலிப்பாய் இணைப்பாளர் ரமணன், சண்டிலிப்பாய் பிரதேச செயலர், ஆலய பங்குத்தந்தை பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மேற்படி அமைச்சின் மத்திய கலாச்சார நிதியத்தினூடாக இக்கட்டிடத்திற்கு 40 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்து. நாடுபூராகவும் கட்டடம் அற்ற கஸ்ரப்பிரதேச அறநெறிபாடசாலைகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post