வவுனியா-கொழும்பு பஸ் விபத்து! -4 பேர்,பலி 19 பேர் காயம்- - Yarl Thinakkural

வவுனியா-கொழும்பு பஸ் விபத்து! -4 பேர்,பலி 19 பேர் காயம்-

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து இன்று திங்கட்கிழமை காலை விபத்துக்குள்ளாகியது.

மாரவில - மஹவெவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்து மின்மாற்றியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 19 பேர் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகர் 8 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர கிசிச்சை பெற்று வருவதாக பொலிஸ் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post