காணாமலாக்கப்பட்ட மகளை தேடி அலைந்த 3 மாவீரர்களின் தாயார் சாவு!  - Yarl Thinakkural

காணாமலாக்கப்பட்ட மகளை தேடி அலைந்த 3 மாவீரர்களின் தாயார் சாவு! 

வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி ,வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும் காணமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடியலைந்த அன்னை மனதாலும் உடலாளும் சோர்வடைந்த நிலையில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார். 

மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே மாரடைப்பால் உயிரிழந்தவர் ஆவார். 

ஏற்கனவே பல தாய்மார்கள் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைந்து உயிரிழிந்திருக்கிறார்கள் இந்நிலையில் இன்று சரஸ்வதி தனது மகளை காணாமலே வலிகளோடு இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார். 
Previous Post Next Post