தீப்பிடித்து எரிந்த ரயில்: 20 பேர் பலி - Yarl Thinakkural

தீப்பிடித்து எரிந்த ரயில்: 20 பேர் பலிஎகிப்து தலைநகர் கெய்ரோ ரயில் நிலையத்தில் மின்சார ரயில் ஒன்று  தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது மோதி தீப்பற்றியதில் 20பேர் பலியாகியுள்ளனர். 

ரயில் நிலையத்தை நெருங்கிய போது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ரயில், நிற்காமல் அதிவேகத்தில் சென்றது. இதையடுத்து ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது ரயில் பயங்கரமாக மோதியது. அதனை தொடர்ந்து ரயிலின் டீசல் தாங்கி வெடித்து தீப்பிடித்தது.

Previous Post Next Post