யாழில் 18 கிலே கஞ்சாவுடன் இருவர் கைது! - Yarl Thinakkural

யாழில் 18 கிலே கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் 18 கிலோ 500 கிறாம் கஞ்சாவுடன் இரு நபர்கள் விசேட அதிரடிப் படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்த நபர்களையும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களான கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிலையும் விசேட அதிரடிப் படையினர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று மாலை வல்வெட்டித்துறையில் ஒரு தொகுதி கஞ்சா கைமாற்றப்படுவதாக பருத்தித்துறை கடற்படையினருக்கு இரகசிய தகவல் கடைத்துள்ளது.

இத் தகவல் தொடர்பில் கடற்படையினர் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளனர் இதனடிப்படையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அவர்கள் வல்வெட்டித்துறையில் வைத்து இருவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

அதே இடத்தினைச் சேர்ந்த 38 வயது மற்றும் நாகர்கோயிலைச் சேர்ந்த 27 வயதுடையவர்களுமே மேற்படி சம்பவத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post