யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது! - Yarl Thinakkural

யாழில் 15 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மணி பகுதியில் வைத்து 14 கிலோ 610 கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதியைக் கடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

யாழ்ப்பாணம், செம்மணிப்பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தென்மராட்சிப் பகுதிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஜே.ஜெயறோசனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர் கர்சன் சமரக்கோன் தலைமையிலான அணியினரோடு துரிதமாக செயற்பட்ட குற்றப்புலனாய்வுப் பொலிஸார் செம்மணிப் பகுதியில் வைத்து 37 வயதான ஒருவரைக் கைது செய்தனர். அவர் எழுதுமட்டுவாழ் பகுதியைச் சேர்ந்தவர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 14 கிலோ 610 கிராம் நிறையுடைய கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்" என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். அண்மைய நாள்களில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக கஞ்சா கைப்பற்றப்படுவதோடு கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post