13 வயது சிறுமியை 365 நாட்கள் வன்புணர்வு! -சிக்கியவருக்கு 60 வருட சிறை- - Yarl Thinakkural

13 வயது சிறுமியை 365 நாட்கள் வன்புணர்வு! -சிக்கியவருக்கு 60 வருட சிறை-

13 வயது சிறுமியை ஒருவருடமாக பல தடவைகள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய நபர் ஒருவருக்கு 60 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்காலை மேல் நீதிமன்றில் இந்த தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கியுள்ளது.

ஹங்கம பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கடந்த 2016 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 13 வயது சிறுமியை பல தடவைகள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தமைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு குறித்த நபருக்க எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்றைய தினம் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது.

57 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான குறித்த நபருக்கு 60 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்ட ஈடு வழங்குமாறும உத்தரவிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post