வவுனியா ஊற்றுக்குளத்தில் திடீரென முளைத்த புத்தர்! - Yarl Thinakkural

வவுனியா ஊற்றுக்குளத்தில் திடீரென முளைத்த புத்தர்!

வவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் என்ற தமிழ் கிராமத்தில் காட்டுப் பகுதிக்குள் புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி பிரதேச  செயலர் பிரிவுக்குட்பட்ட ஊற்றுக்குளம் கிராமம் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியேறாதபோதும் அங்குள்ள விவசாய நிலங்களில் தமிழ் மக்கள் இன்றுவரை விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஊற்றுக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் திடீரென பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அங்கு விவசாய செய்கையில் ஈடுபடுபவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அங்கு பௌத்த பிக்கு ஒருவரும் அவருக்கு காவலாளிகள் இருவமாக 3 பேர் அங்கு தங்கியுள்ளனர் என்றும் விவசாயிகள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Previous Post Next Post