தேசிய கட்சிகள் தமிழகத்தை வஞ்சிக்கின்றன! -தினகரன் குற்றச்சாட்டு- - Yarl Thinakkural

தேசிய கட்சிகள் தமிழகத்தை வஞ்சிக்கின்றன! -தினகரன் குற்றச்சாட்டு-

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவாக இருந்தாலும் சரி, முன்னர் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, அவை எப்போதும் தமிழக மக்களுக்கும் அவர்களின் நலனுக்கும் எதிராகவே செயல்பட்டு வந்துள்ளன.

ஆகையால், அவர்களுடன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அணி சேரப்போவதில்லை என தெரிவித்துள்ளார் ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளருமான தினகரன்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள தினகரன், உயர்சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 வீத இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரத்திலும் சரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்திலும் சரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களிலும் சரி காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஒருபோதும் நடுநிலையாகவோ, தமிழகத்திற்கு ஆதரவாகவோ செயல்பட்டதில்லை. உண்மை நிலை அப்படியிருக்க அவர்களுடன் கூட்டு சேர்வதால் எவ்வித பயனுமில்லை என தேசிய கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் அணி சேர்க்கையில் காங்கிரஸ{டன் தினகரன் இணையக்கூடுமென கருதப்பட்ட நிலையில், முன்னரே காங்கிரஸ் அணியிலுள்ள திமுக இதனை விரும்பாத காரணத்தினால் தினகரன் தேர்தலை தனியாக சந்திக்க தயாராகிவருகிறார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

போதைக்கு எதிராக யாழில் மாணவர்கள் போராட்டம்!
போதைப் பொருள் தடுப்பு வார்த்தை முன்னிட்டு போதைக்கு எதிராக யாழில் உள்ள பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்பபாணம் கல்வியங்காடு செங்குத்தா இந்துக் கல்லூரி மாணவர்கள் பாடசாலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை இப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போதைப் பொருளுக்கு எதிரான செயற்பாட்டை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் இன்று ஆரம்பித்துள்ளார். இதற்கமைய போதைப் பொருள் ஒழிக்கும் நடவடிக்கைகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேவ்வேறு அமைப்புக்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் இன்று திங்கட்கிழமை முதல் ஒரு வாரம் போதைப் பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு போதைப் பொருளுக்கு எதிரான போராட்டங்கள் வழிப்புணரகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post