யாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்! - Yarl Thinakkural

யாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று வெள்ளக்கிழமை  யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பத்தாவது தடவையாகவும் நடைபெறுகின்ற இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்க்வு யாழ் பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனொல்ட் யாழிலுள்ள இந்திய துணைத்தூதரக துணைத் தூதுவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று 25 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் யாழ் மாநகர மைதனத்தல் நடைபெறவிருக்கும் இக் கண்காட்சியை மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்Nஆனால்ட் உத்தியோகபுர்வமாக நாடாவெட்டி திறந்து கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
Previous Post Next Post