யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வு! - Yarl Thinakkural

யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வு!

இந்தியாவின் 70 வது குடியரசு தின நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்றது.

இன்று சனிக்கிழமை நிகழ்வுகள் காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்.இந்திய துணை தூதரக அலுவலர்கள் வடமாகாணத்தில் வசிக்கும் இந்திய பிரஜைகள் மற்றும் இந்திய வம்சாவழியினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடரந்து இந்திய ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட குடியரசுதின வாழ்த்துச் செய்தி ந்திய துணைத் தூதுவரால் வாசித்தளிக்கப்பட்டது.


Previous Post Next Post