சுமந்திரனுக்கு கடும் எதிர்ப்பு! -அவரின் புகைப்பட பதாகை மீது தாக்குதல்- - Yarl Thinakkural

சுமந்திரனுக்கு கடும் எதிர்ப்பு! -அவரின் புகைப்பட பதாகை மீது தாக்குதல்-

வடமராட்சி பருத்தித்துறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்தினுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை மீது வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை பகுதியில் எம்.பி சுமந்திரனுக்கு கடந்த புதன்கிழமை வரவேற்று நிகழ்வு நடைபெற்றது. 

அன்றைய தினத்தில் பருத்தித்துறை நீதிமன்ற வீதி மற்றும் ஆலய புணரமைப்பு செய்யப்பட்மை தொடர்பான “கம்பெரிலிய அபிவிருத்தி யுத்தம்” என்னும் திட்டத்தின் பதாகை திரைநீக்கம் செய்யப்பட்டது. 

இதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எம்.பி சுமந்திரனுடைய புகைப்படங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் நேற்று குறித்த பதாகைகள் மீது வர்ணங்கள் பூசப்பட்டு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இருப்பினும் குறித்த பதாகையில் உள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய புகைப்படங்கள் மீது எந்தவிதமான வர்ணங்களும் பூசப்படவில்லை. 

இதனால் எம்.பி சுமந்திரனுக்கு எதிர்பினை வெளிப்படுத்தும் வகையிலேயே அப் பதாகைகள் மீது வர்ணங்கள் பூசப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
Previous Post Next Post