கூட்டமைப்பின் எம்.பிக்கள் குழுக் கூட்டம் இன்று காலை! - Yarl Thinakkural

கூட்டமைப்பின் எம்.பிக்கள் குழுக் கூட்டம் இன்று காலை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான அறிவிப்பையும் சம்பந்தன் இந்தக் கூட்டத்தில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகின்றது.
Previous Post Next Post