வலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்! - Yarl Thinakkural

வலி.தெற்கில் நடைபாதை வியாபாரங்கள் அகற்றல்!

வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்திற்கு புறம்பான வகையில் இருந்த நடைபாதை வியாபாரம் அகற்றப்பட்டுள்ளது.

வலி.தெற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப உடுவில் உப அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடுவில் உப அலுவலக பொறுப்பதிகாரி தலமையிலும் வருமானவரி பரிசோதகர்கள் மற்றும் சுன்னாகம் பொலிசாரின் உடவியுடனும் இவ்வதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் மக்களின் நலன் கருதி போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் நோக்கில் காணப்பட்ட நடைபொதை வியாபாரங்கள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Previous Post Next Post