சட்டத்தரணியுடம் மண்றில் சரணடைய சந்தேக நபருக்கு உரித்துண்டு! -யாழ் சிரேஸ்ர சட்டத்தரணிகள்-  - Yarl Thinakkural

சட்டத்தரணியுடம் மண்றில் சரணடைய சந்தேக நபருக்கு உரித்துண்டு! -யாழ் சிரேஸ்ர சட்டத்தரணிகள்- 

பருத்தித்துறை நீதவான நீதிமன்றில் கொள்ளை வழக்கொன்றின் சந்தேக நபர் ஒருவர் தனது சட்டத்தரணி மூலம் சரணடைய முயன்ற சம்பவம் தொடர்பில் வெளியான சில ஊடக செய்திகள் சட்டவட்டாரங்களில் ஆட்சேபனையை உருவாக்கியுள்ளது.

அண்மையில் யாழில் உள்ள முன்னணி பெண் சட்டத்தரணி சந்தேக நபர் ஒருவரை நீதிமன்றில் சரணடைய வைத்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.  இவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஸ்ட சட்டத்தரணிகள் ஊடகவியாளர்களுடன் சில விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.  குறிப்பாக குற்ற வழக்கு ஒன்றில் பொலிஸாரினால் தேடப்படும் சந்தேக நபர் ஒருவர் நீதவானிடம் நேரடியாக சரணடையும் உரிமை உள்ளது. 

சட்டத்தரணிகள் ஊடாக சந்தேக நபர் சரணடைவதை ஏற்பதோ அல்லது மறுப்பதோ நீதவானின் அதிகாரத்திற்கு உட்பட்டது. பொலிஸாரால் கைது செய்யப்பட்டால் தான் தாக்கப்பட்டு அல்லது சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற கரணமாகவே சட்டத்தரணிகள் ஊடாக சந்தேக நபர்கள் நீதிமன்றில் சரணடைகின்றனர். இந்த நடமுறை மிக நீண்ட காலமாகவே உள்ளது.  

ஆனால் ஒரு குற்றம் தொடர்பில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டியிருந்தால் சரணடையும் சந்தேக நபரை பொலிஸில் ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட சட்டத்தரணிக்கு நீதவான அறிவுறுத்தல் வழங்க முடியும். அவ்வறிவுறுத்தலை சட்டத்தரணிகள் நடமுறைப்படுத்த வேண்டும் என்றும் சிரேஸ்ர சட்டத்தரணிகள் கருத்து வெளியிட்டனர்.   

பொலிஸ் நிலையங்களில் குற்ற விசாரணைகளின் போது சந்தேக நபர்களின் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டமை தொடர்பான ஏராளமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இவ்வாறு பதிவான சம்பவங்கள் மீதான் சட்டத் தீர்புகள் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் அண்மைக்காலம் வரையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ளது என்றும் அச் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.  

இந்த நிலையில் தன்னை நம்பி நாடிய ஒரு பிரஜையின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக பொலிஸார் உட்பட அதிகார சக்திகளுடன் முரண்படுவதற்கும், மோதுவதற்கும் துணியும் சட்டத்தரணி எவரையும் பாராட்டா விட்டாலும், சிறுமை படுத்தும் விதத்தில் செய்திகளை உருவாக்கி வெளிவருவது நீதியானது அல்ல என்றும், அந்த சிரேஸ்ர சட்டத்தரணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.  
Previous Post Next Post