யாழிற்க்கு எதனோல் எதற்காக வந்தாது! -வெளியானது உண்மை தகவல்- - Yarl Thinakkural

யாழிற்க்கு எதனோல் எதற்காக வந்தாது! -வெளியானது உண்மை தகவல்-

யாழில் இன்று சிறப்பு அதிரடி படையால் மீட்கப்பட்ட எதனோல் போல் ஏராளமான லீற்றர் எதனோல் கடந்த காலங்களில் பல முறை இங்குள்ள மதுபான கடை உரிமையாளரால் கொண்டுவரப்பட்டு மதுசாரத்துடன் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கண்டியிலிருந்து பாரவூர்தி ஊடாக எடுத்துவரப்படும் எதனோல் ஏழாலைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றில் மறைத்து வைக்கப்படும். அதனை பட்டா ரக வாகன ஒன்றில் தினமும் இரவு வேளைகளில் எடுத்துச் சென்று திக்கம் வடிசாலையில் வைத்து பனம் சாரயத்துடன் கலப்படம் செய்யப்படும். 

இவ்வாறு அதிகளவு எதனோல் கலப்படம் செய்யப்பட்ட பனம் சாராயம் திக்கம் வடிசாலையில் வைத்து மீளவும் போத்தலில் சீல் வைக்கப்படும். இந்த நடவடிக்கை சுமார் 2 ஆண்டுகளாக இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையை கடந்த சில நாள்களுக்கு முன்னர் திக்கம் வடிசாலை ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர். 

அதுதொடர்பில் ஆராய்ந்து மல்லாகம் இராணுவ முகாமுக்கு அவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினருக்கு மல்லாகம் இராணுவ அதிகாரி தகவல் வழங்கியுள்ளார். 

அதனடிப்படையில் ஏழாலைப் பகுதியில் சுற்றிவளைப்பை முன்னெடுத்த சிறப்பு அதிரடிப்படையினர், நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றைச் சோதனையிட்டனர். இதன்போதே  20 லீற்றர் கொள்ளவுடைய 371 கான்களில் எதனோல் (தூய மதுசாரம்) கைப்பற்றப்பட்டது.
Previous Post Next Post