யாழில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்! - Yarl Thinakkural

யாழில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்!

திருகோணமலையில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் 13 ஆவது நினைவு நானைவு தினம் இன்று சனிக்கிழமை யாழில் அனுஸ்ரிக்கப்பட்டது.

யாழ்.பிரதான வீதி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவு தூபியிலேயே அவருடைய நினைவேந்தல் அனுஸ்ரிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையம் மற்றும் கிழக்கு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளருக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

இந்நிலைவேந்தலின் போது நினைவு தூபிக்கான மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடுன், தீபம் ஏற்றியும், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
Previous Post Next Post