மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆளுநர்! - Yarl Thinakkural

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆளுநர்!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா கல்லூரி அதிபர் சேகு ராஜிது தலைமையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்வில் யாழப்பாணம் பிரதேச செயலாளர் பொ.தயானந்தன், யாழ் மாநகரசபை உறுப்பினர்களான ஜனாப் எம்.எம்.எம். நிபாஹிர் மற்றும் கே.எம். நிலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், பிரதேச செயலரின் சேவைகளைப் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் எவருமே எதிர்பாராத சமயம் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்ததுடன், சிறப்புரையும் ஆற்றினார்.
Previous Post Next Post