பாதீட்டை தமிழர்களின் விடுவிக்காக கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும்! -ஈ.பி.ஆர்.எல்.எவ் கோரிக்கை- - Yarl Thinakkural

பாதீட்டை தமிழர்களின் விடுவிக்காக கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும்! -ஈ.பி.ஆர்.எல்.எவ் கோரிக்கை-

உட்பொருள் ,ல்லாத அரசியல் சாசனக்யம் என்ற வாதத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தி, தமிழ் மக்களுக்கான ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பதற்காக வரவு செலவு திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் பீட கூட்டம் கடந்த திங்கட்கிழமை கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ,தன்போது நாட்டின் சமகால அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஈபி.ஆர்.எல்.எவ்வின் தலைமை ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையிலேயே மேற்படி கோரிககை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

,துவரை காலமும் புதியதொரு அரசியல் சாசனம் கொண்டுவரப்படும் என்றும் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அதனூடாக தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமிழ் மக்களுக்குச் சொல்லிவந்தது.

ஆனால் ,ன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில், தேசிய அரசாங்கம் சிதைவடைந்து தனித்தனி வழியே செல்லும்போது, பாராளுமன்றத்தில் புதியதொரு அரசியல்யாப்பிற்கான வரைபு சமர்ப்பிக்கப்பட்டாலும், அதில் மூன்றில் ,ரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள மாட்டாது என்பதும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமாட்டாது என்பதும் நிதர்சனமான உண்மையாக ,ருக்கின்றது.

,ந்நிலையில், தொடர்ச்சியாக அரசியல் சாசனத்தைக் கொண்டுவருகிறோம் என்ற வாதத்தை நிறுத்தி, தமிழ் மக்களுக்கான ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு வரவுள்ள வரவு-செலவுத் திட்ட நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளவேண்டும் என்றும் அவ்வறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

Previous Post Next Post