இன்று கூடுகிறது அமைச்சரவை!  - Yarl Thinakkural

இன்று கூடுகிறது அமைச்சரவை! 

இந்த வாரத்துக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெற்று வரும் நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தலைமையில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதால், இன்று திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர்களுடனான விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டிய யோசனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post