தெரு நாய்களுக்குக் காப்பகம்! - Yarl Thinakkural

தெரு நாய்களுக்குக் காப்பகம்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள தெருநாய்களின் தொல்லையையைக் கட்டுப்படுத்த இயக்கச்சியில் காப்பகம் ஒன்றை அமைத்து பராமரிக்கும் திட்டம் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரு நாய்களை பிடித்து அவற்றைக் கொல்லாது பராமரிப்பதற்கான ஓர் திட்டத்த்துக்கு இடம் தேடப்பட்டது.

குறித்த காப்பகத்துக்கு பொருத்தமான இடமாக இயக்கச்சி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இயக்கச்சிப் பகுதியில் காப்பகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் காப்பகம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள் அடங்குவதனால் கிளிநொச்சி மாவட்டத்தில் கானப்படும் தெரு நாய்களையும் பொறுப்பேற்று பராமரிக்கவுள்ளனர்.

குறித்த திட்டத்தை தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத் தலைவர் ஆர்.திருமுருகன் முன்னெடுத்தாலும். அதற்கான ஒப்புதல் மற்றும் ஏனைய நிர்வாக ஒழுங்குகள் அவசியம் தேவைப்படுகிறது.

அதற்கமைவாக குறித்த திட்டம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் மார்ச் மாதம் இறுதி முதல் மேற்படி காப்ப்பகம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post