சுமந்திரன் பொய் கூறுகின்றார்! -தவராசா- - Yarl Thinakkural

சுமந்திரன் பொய் கூறுகின்றார்! -தவராசா-

டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுக் கொடுத்த மறுநாளே நான் அவருடன் இணைந்துவிட்டேன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னால் எதிர்கட்சி தலைவர் சி.தவரசா தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவரிடம் ஊடகவியலாளர்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சு பதவி கிடைத்ததும் நீங்கள் மீண்டும் அவருடன் சென்று இணைந்ததாக கூறியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இதுவரை காலும் எம்மோடு உறவாடிய டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சு பதவி கிடைத்த மறுநாளே தவராசா அவருடன் இணைந்துவிட்டார் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் வினவிய போதே இதனை தெரிவித்தார்.

மேலும் நான் எல்லோருடனும் உறவில் தான் இருக்கிறேன்.  டக்ளஸ் அன்றிலிருந்து இன்று வரை உறவு வைத்திருக்கிறேன். ஈ.பி.டி.பியில் இருந்து நான் விலகுவும் இல்லை, என்னை விலத்தவும் இல்லை. எவரையும் நான் பகமை கொள்ளவில்லை என்றார்.
Previous Post Next Post