முல்லையில் மீன்பிடிக்க போனவருக்கு கிடைத்த அதிஸ்டம்! - Yarl Thinakkural

முல்லையில் மீன்பிடிக்க போனவருக்கு கிடைத்த அதிஸ்டம்!

முல்லைத்தீவு - நாயாறு ஆழ்கடலில் மிதந்து வந்த ஒரு தொகுதி வலை அங்கு மீன்படிக்கச் சென்ற மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளன.

நாயறுப்பகுதி மீனவர்கள் நேற்று காலை ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர்.

இதன்போது ஆழ்கடல் பகுதியில் பெறுமதியான வலைகள் மிதந்து வருவதனை பார்த்து அவற்றை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட வலைகள் முல்லைத்தீவு பொலிஸாரிடம், மீனவர்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 30ஆம் திகதி ஆந்திர மாநில கடற்தொழில் பதிவை கொண்ட மீனவ படகொன்று வளைஞர்மடம் பகுதியில் கரை ஒதுங்கியது.

குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட வலைகளும், நேற்றைய தினம் மீனவர்களால் மீட்கப்பட்ட வலைகளும் ஒரே வகையானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post