ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்! -ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே மோதல்- - Yarl Thinakkural

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்! -ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே மோதல்-

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச

ராஜபக்ச சகோதரர்களில், மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே, இவ்வாறு கூறியுள்ளார்.

மக்கள் தயார் என்றால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு நான் பொருத்தமானவர் எனின், நானும் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கின்றேன் என்று சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்றும், அவர் யார் என்பதை இப்போது வெளியிட முடியாது எனவும் சில நாட்களுக்கு முன்னதாக, சமல் ராஜபக்ஷ எம்.பி. கூறியிருந்தார்.

இதற்குப் பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று அறிவித்துள்ளதை அடுத்து, சமல் ராஜபக்ஷ, தானும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்சவின் இந்தக் கருத்து, ராஜபக்ஷ குடும்பத்துக்குள்ளேயே ஜனாதிபதி பதவிக்கான போட்டி, தீவிரமடைந்துள்ளது என்பதையே வெளிப்படுத்தியுள்ளது.
Previous Post Next Post