யாழில் கஞ்சா விற்பனை முறியடிப்பு! - மூவர் கைது- - Yarl Thinakkural

யாழில் கஞ்சா விற்பனை முறியடிப்பு! - மூவர் கைது-

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்கரையில் நூற்றிபத்துக்கிலோ கஞ்சாவையும் அதனைக் கடத்த முயன்ற மூன்று சந்தேக நபர்களையு கடற்படையும், பொலிஸாரும் இணைந்து நேற்று மதியம் மடக்கிப் பிடித்துள்ளனர். 

யாழ். மாதகல் கடற்பரப்பில் இருந்து வல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு 100 கிலோ கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனையடுத்து துரிதமாகச் செயற்பட்ட கடற்படையினர் கஞ்சா கடத்தப்படுவதைப் பின்தொடர்ந்ததுடன் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இறக்கப்படுவது தொடர்பிலும் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வைத்து நூறுகிலோ கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதுடன் இக் கஞ்சாவைக் கடத்தி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நபர் ஒருவரையும் இக் கஞ்சாவைக் கொள்வனவு செய்வதற்கு வந்திருந்த கொழும்ப்பைச் சேர்ந்த இருவரையுமாக மொத்தமாக மூன்று நபர்களையும் கைது செய்துள்ளனர். 

இதன் போது நூறுகிலோ கஞ்சாவுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post