வடக்கின் புதிய ஆளுநரின் பின்னணி என்ன தெரியுமா?  - Yarl Thinakkural

வடக்கின் புதிய ஆளுநரின் பின்னணி என்ன தெரியுமா? 

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக இவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யார் இந்த சுரேன் ராகவன்? 

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரான கலாநிதி சுரேன் ராகவன் ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றார். 

2005ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் MA பட்டம் பெற்ற இவர், 2008ஆம் ஆண்டு PhD முடித்தார். 

பின்னர் 2008 – 2011களில் பிரிட்டன் அரசின் புலமைப்பரிசிலும் இவருக்கு வழங்கப்பட்டது. கனடா – ஒன்றாரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதை வென்ற இவர், நேரடி அரசியலில் பெரும் அனுபவசாலியாவார். 

இவர் தற்போது ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக உள்ளார். அத்தோடு இவர் ஓர் தீவிர பௌத்த சிந்தனைவாதியாவார். 

பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். 

இவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post