குழந்தையை கொடுமைப்படுத்திய நடிகை பானுப்ரியா! - Yarl Thinakkural

குழந்தையை கொடுமைப்படுத்திய நடிகை பானுப்ரியா!

நடிகை பானுப்ரியா தன் வீட்டில் 14 வயது சிறுமியை குழந்தைத் தொழிலாளியாக வைத்து சம்பளம் கொடுக்காமல் அடித்து கொடுமைப்படுத்துவதாக குழந்தையின் தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகை பானுப்ரியா ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்து வந்தார். தமிழில் விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உட்பட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ்பெற்றார்.

தற்போது சென்னையில் வசிக்கும் இவர் அதிக படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கிறார். இருஃதாலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். முக்கியமாக அம்மா, அக்கா வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் ஹீரோயின்களுக்கு டப்பிங் வாய்ஸ{ம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது வீட்டில் ஒரு சிறுமியை வேலைக்காரியாக வைத்துக்கொண்டு சம்பளமும் கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரியில் உள்ள சமால்கோட் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

 “14 வயது மகளை நடிகை பானுப்ரியா சென்னையில் உள்ள தன் வீட்டில் குழந்தைத் தொழிலாளியாக வைத்திருக்கிறார். சம்பளம்கூட கொடுப்பதில்லை. அது மட்டுமின்றி குழந்தையை அடித்துக் கொடுமைப்படுத்தி வருகிறார்.” என்று அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், தன் குழந்தையைப் பார்க்கச் சென்றபோது பார்க்கவிடாமல் தடுத்து விரட்டிவிட்டதாகவும் அந்தப் பெண் கூறியிருக்கிறார்.
Previous Post Next Post