மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகள்! - Yarl Thinakkural

மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகள்!

திருச்சி திருவெறும்பூர் அருகே குடும்ப பிரச்சனையால் மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவெறும்பூர் அடுத்த கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் சின்னபொண்ணு என்பவர், கணவர் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்ததால் மருமகள் ஈஸ்வரியுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக மருமகள் ஈஸ்வரி மனநிலை பாதிக்கப்பட்டது போல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் சின்னபொன்னுவுக்கும், ஈஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி அரிவாளால் மாமியாரை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் ஊருக்கு வெளியே உள்ள மரத்தில் ஈஸ்வரி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் வெட்டுப்பட்ட சின்னபொண்ணுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Previous Post Next Post