-கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து ஒழுங்கு- - Yarl Thinakkural

-கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து ஒழுங்கு-

இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை காலிமுகத்திடலில், ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதால், சில வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையிலும் சைத்தியா வீதியூடாகவும் வாகனங்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி சந்தியால் காலிமுகத்திடல் நோக்கி பிரவேசிப்பதற்கும், சென். மைக்கல்ஸ் வீதியால் காலிமுகத்திடல் நோக்கிப் பயணிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடுன்ன சுற்றுவட்டத்தின் ஊடாக காலி வீதிக்குள் பிரவேசிப்பதற்கும், செரமிக் சந்தியூடாக பழைய பாராளுமன்றம் நோக்கி பயணிப்பதற்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 7 முதல் நண்பகல் 12 மணிவரை ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதால் குறித்த வீதிகள் குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளன.
Previous Post Next Post