கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை! - Yarl Thinakkural

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை!

லுணுகம்வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படவ்கம பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வெட்டுகாயங்களுடன் இருந்த பெண்ணை லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

படவ்கம, உனாதுவெவ பகுதியை சேர்ந்த 30 வயதுடைய அமிதா அமரசேகர எனும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக தனது இரு பிள்ளைகளுடன் கடந்த சில மாதங்களாக தனது தாய் வீட்டில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி தன்னுடைய கணவன் தனது பிள்ளைகளை கவனிப்பதில்லை என குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் லுணுகம்வெஹர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post