இரணைமடு கிளி-விவசாயிகளுக்கு உரித்தானது! -வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன்- - Yarl Thinakkural

இரணைமடு கிளி-விவசாயிகளுக்கு உரித்தானது! -வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன்-

கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரித்தான இரணைமடுக் குளநீரை அவர்களே பயன்படுத்தும் முதல் உரிமை உடையவர்கள் என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்திற்கு இன்று காலை வந்த கிளிநெச்சி விவசியிகள் வடக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

அவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடரபில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இரணைமடுக் குளத்தில் உள்ள தண்ணீர் கிளிநொச்சி மக்களுக்கு உரியதாகும். அக் குளத்தின் தண்ணீரை அம்மக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இருப்பினும் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கும் தண்ணீர் தேவை உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தண்ணீருக்கு உரித்துடையவர்கள் அந்த தண்ணீரை வீண்விரையமாக்காமல் பயன்படுத்திவிட்டு, வேறு மாவட்டங்களில் தண்ணீர் தேவை உடையவர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என்பதே சர்வதேச நீதியாகும்.

இதே வேளை வடக்கின் ஜந்து மாவட்டங்களிலும் எங்கு நீர் உள்ளது, அதனை எவ்வாறு சேமித்து மக்களின் தேவைகளுக்காக பயன்டுத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இக்குழுவில் விவசாய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 3 பெண்களல் உட்பட 5 பேர் மாவட்டங்களின் அடிப்படையில் உள்ளடக்கப்படுவார்கள்.

இந்த வகையில் கிளிநொச்சி விவசாயிகளுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இவ்வருடன சிறுபோகச் செய்கைக்காக இரணைமடுக் குளத்தில் உள்ள நீரை விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

யாழ்ப்பாணத்து மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடக்கில் வீண்விரையமாக்கப்பட்டு கடலுடன் கலக்கும் நன்னீரை எவ்வாறு சேமித்து மக்களுக்கு வழங்க முடியும் என்பது தொடர்பில் ஆராய்ந்து எதிர்காலத்தில் நீர் தேவைகளை முழுமையாக நிர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கிளிநொச்சியில் உள்ள விவசாயிகள் தமது பிரச்சினைகளோ அல்லது, நீர் முகாமைத்துவம் தொடர்பான கருத்துக்களை அக்குழுவிடம் முன்வைக்க முடியும்.

வடக்கு மக்களின் தேவைகளை முழுமையாக தீர்த்துக் கொள்வதற்கான நீர் வளம் இங்கு உண்டு. அந்த நீரை பராமரித்து மக்களுக்கு வழங்குவதிலேயே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்தில் தண்ணீர் அதிகமாக உள்ளது, மற்றுமொரு மாவட்டத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது. இதனல்தான் நீர் பிரச்சினை மெலேழுகின்றது.

இதனால் பேச்சுவார்த்தை ஊடாக
எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு வடமாகாணத்தின் முகாமைத்துப்படுத்தப்படும் திட்டம் ஒன்று முன்மொழியப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தண்ணீர் பிரச்சினை தொடர்பான பிரகடணம் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
Previous Post Next Post