போதைக்கு எதிராக யாழில் போராட்டம்! - Yarl Thinakkural

போதைக்கு எதிராக யாழில் போராட்டம்!

வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனை, மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுபடுத்த வலயுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. 

யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றது. 

ஜனநாயகத்துக்கான இளைஞர் அமைப்பானது இப் போராட்டத்தை மேலும் பல இளைஞர்களை இணைந்து இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், போதைப்பொருள் பாவனையை கட்டுபடுத்து, சிறுவர் பெண்கள் துஸ்பிரயோகத்தை கட்டுபடுத்த வேண்டும், தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்த வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியிருந்தனர். 

மேலும் இளைஞர்களது வேலைவாய்ப்புக்களை உறுதிப்படுத்த வேண்டும், இதற்கு அரசியல் தலமைகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

சுமார் ஒரு மணி நேரம் இப் போராட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post