ஆர்யா – சாயிசா விரைவில் திருமணம்? - Yarl Thinakkural

ஆர்யா – சாயிசா விரைவில் திருமணம்?

நடிகர் ஆர்யாவை பொறுத்தவரை அவருடன் ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகளுடன் கிசுகிசு வருவது வழக்கமான ஒன்று. பூஜா, எமி ஜாக்சன், நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா என பல கதாநாயகிகளுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். உடன் நடிக்கும் நடிகைகளுக்கு அவர் பிரியாணி விருந்து கொடுத்து அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது வழக்கம் என்பார்கள்.

இதுவரை வந்த பல கிசுகிசுக்கள் எவ்வளவு வேகமாக பரவியதோ அவ்வளவு வேகமாக பொய் ஆகியது. ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளும்படி நண்பர்களும் குடும்பத்திலும் வற்புறுத்துகின்றனர். ஆனால் பொருத்தமான பெண் கிடைக்காமல் தவித்து வந்தார் ஆர்யா. இதனால் மணப்பெண்ணை தேர்வு செய்ய நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதிலும் அவருக்கு பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் சாயிஷா. இருவரும் ஜோடியாக நடித்தது முதல் இணைபிரியாத நண்பர்களாகிவிட்டனர். தினமும் செல்போனில் மணிக் கணக்கில் பேசுவதுடன், செய்திகளும் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களின் நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது என்கிறார்கள்.

இதை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தங்களது விருப்பத்தை இருவரும் அவரவர் பெற்றோரிடம் கூறியபோது குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.
Previous Post Next Post