பரபரப்பை ஏற்படுத்திய ஜீவா படத்தின் பாடல்! - Yarl Thinakkural

பரபரப்பை ஏற்படுத்திய ஜீவா படத்தின் பாடல்!

குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் இயக்கி ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜிப்ஸி. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் தொடர்ச்சியாக படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘வெரி வெரி பேட்’ என்ற பாடல் படக்குழுவினரால் யூடியூபில் வெளியிடப்பட்டது. ராஜு முருகனின் வழக்கமான சிந்தனையும், அதிகாரத்துக்கு எதிரான முழக்கமாகப் பாடலாசிரியர் யுகபாரதியால் எழுதப்பட்ட வரிகளும் இருக்கும் காரணத்தினால் இணையத்தில் வெளியான சில மணிநேரத்துக்குள்ளேயே இப்பாடல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

Previous Post Next Post